செல்லப்பிராணிக்கு ரூ.16.5 லட்சம் மதிப்பிலான சொகுசு வீட்டை யூடியூபர் ஒருவர் பரிசளித்துள்ள சம்பவம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மனிதர்கள் அதிகம் விரும்பும் செல்லப்பிராணிகளின் பட்டியலில் நாய்கள் எப்போதும் முதலிடத்தில் இருக்கின்றன. மக்கள் தங்களுக்கான ஒரு வசதியான வீட்டைக் கட்ட வேண்டும் என்று கனவு காண்பது வழக்கம். ஆனால், அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ப்ரெண்ட் ரிவேரா தனது செல்லப்பிராணிக்கு ரூ.16.5 லட்சம் மதிப்பிலான சொகுசு வீட்டை பரிசாக அளித்துள்ளார். அவரது செல்லப்பிராணியாக வளர்த்து வரும் நாயின் பெயர் சார்லி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ப்ரெண்ட் ரிவேரா தனது முதல் நாயான பேக்கர் இறந்த பிறகு மிகவும் சோகத்தில் இருந்துள்ளார். இனி ஒரு நாய் மீது தன்னால் பேக்கர் அளவுக்கு அன்பு செலுத்த முடியாது என்று எண்ணி இருந்தார். ஆனால் சார்லியின் வருகையால், பேக்கரின் மறைவால் ஏற்பட்ட வலி நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது.
இந்த நிலையில், சார்லியின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு, ப்ரெண்ட் ரிவேரா சிறப்பான பரிசு எதாவது அளிக்க விரும்பினார். இது குறித்து தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு வந்தார். அவரது நண்பர்கள், நாய் சார்லிக்கு ஒரு சொகுசு வீட்டை பரிசளிக்க பரிந்துரை செய்துள்ளனர். இந்த ஆலோசனை ப்ரெண்ட் ரிவேராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.எனவே, அவர் தனது நண்பர்களுடன் உடனடியாக ஒரு சொகுசு வீட்டைக் கட்டும் பணியில் ஈடுபட்டார்.
ப்ரெண்ட், தனது வீட்டிற்கு அருகிலேயே நாய் சார்லிக்கும் வீட்டைக் கட்டியுள்ளார். பொதுவாக மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்து ஆடம்பரங்களையும் சார்லியின் வீட்டில் ப்ரெண்ட் வடிவமைத்துள்ளார். சார்லியின் இந்த புதிய வீட்டில் டிவி, சோஃபா, பஞ்சு மெத்தை, டேபிள், கடிகாரம், மினி ஃப்ரிட்ஜ், பீன் பேக்குகள், தலையணைகள் மற்றும் சார்லியுடன் ப்ரெண்ட் ரிவேரா இருக்கும் புகைப்படம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டிற்கு வெளியே “இது சார்லியின் வீடு” என்ற பலகையும் வைக்கப்பட்டுள்ளது. யூடியூபரின் இந்த சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.