ரோகித்திற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு – ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னாள் இந்திய வீரர் அறிவுறுத்தல்…!

முன்னாள் வீரர் இந்திய அணி மனோஜ் திவாரி, ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஐபிஎல் தொடரின் மிக சிறந்த அணிகளில் ஒன்று மும்பை. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அந்த அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. நடப்பு தொடரில் தான் விளையாடிய 5 ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு மும்பை அணி தள்ளப்பட்டுள்ளது. மும்பை வீரர்களின் செயல்பாடுகளை தாண்டி அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

இந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை மீண்டும் ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு உங்களுக்கு (மும்பை) வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக, தவறுகள் இந்த ஆண்டு மட்டுமே நடந்தன என்று அர்த்தமல்ல. கேப்டன்சி பலவீனமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஹர்திக் அணியை வழிநடத்த வேண்டிய விதத்தில் வழிநடத்தவில்லை. ஒரு கேப்டனாக, முன்கூட்டியே செயல்படுவது மிகவும் முக்கியம். ஒரு தீர்வு தேவை என்றால், ஹர்திக் கேப்டன் பதவியிலிருந்து விலகி, அந்தப் பொறுப்பை மீண்டும் ரோஹித்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ரோஹித்தை நீக்கியபோது, ​​அநீதி இழைத்தீர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.