#IPL2026 | கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

குஜராத் அணி 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் குஜராத் – கொல்கத்தா அணிகள் மோதியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய டிம் செய்ஃபர்ட்19 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான அஜிங்கியா ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அங்ரிஷ் ரகுவன்ஷி 8 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த கேமரூன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.