சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் வேலை ; உடனே விண்ணப்பிக்கவும்…!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 26 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு தகுதியானவர்களை பணியில் சேர்த்து கொள்கிறது. அந்த வகையில் தற்போது 26 பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.

பணியிட விவரம் 

இது தொடர்பான வெளியான அறிவிப்பின் படி,  ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பிரிவில் உள்ள 26 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ரிஸ்க் மேனேஜ்மென்ட் 18

ரிஸ்க் அனாலிசஸ் 6

மார்க்கெட் ரிஸ்க் 2

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு 

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  பி.இ.,  பி.டெக்., எம்.பி.ஏ.,  சி.ஏ., உள்ளீட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பை பொருத்தவரை 20 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும்.

தேர்வு மற்றும் சம்பள விவரம்

எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம் : ரூ. 1,20,940 இலட்சம்

ஏப்ரம் மாதம் 30 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு : https://centralbank.bank.in/en/recruitments

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.