முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது – உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டை தனி நீதிபதி இளந்திரையன் ஏற்க மறுத்து விட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விவகாரம் தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி
கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் திருமாவளவன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டைக் கேட்ட பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு, வழக்கில் ஒரு தரப்பாக இல்லாத நிலையில், தனி நீதிபதி உத்தரவை திரும்ப பெற கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், மேல் முறையீடு தான் தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று திருமாவளவன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி
தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டதா,
இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்திருந்தது.

உணவு இடைவேளைக்கு முன் இதுகுறித்து விளக்கம் அளித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்குகள்
குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த உத்தரவை எதிர்த்து உச்ச
நீதிமன்றத்தில்தான் மேல் முறையீடு செய்ய முடியும் என்றும், சென்னை
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், அது
விசாரணைக்கு உகந்ததல்ல என விளக்கம் அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு

Web Editor

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை அதிகரிப்பு!

Halley Karthik

பவானி அருகே மது போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது

Web Editor