மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவிகிதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு…

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவிகிதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை ஆகிய மூன்று முக்கிய ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கூறினார்.

மேலும், பிரதமர் மோடியின் கரீப் கல்யாண் அன்ன யோஜனதா திட்டத்தின் கொரோனா காலத்தில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. அந்த நடைமுறை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் மத்தியமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.