நிலக்கரி சுரங்கத் திட்டம் காவிரி டெல்டாவில் கைவிடப்படுவதாக மத்திய அரசின் அறிவிப்பு விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என விவசாயிகள் சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிலக்கரி எடுத்து திட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்தது. இதையஎடுத்து மன்னார்குடி காந்தி சில அருகில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மத்திய அரசு காவிரி டெல்டாவில் புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4ம் தேதி போராட்டத்தை நடத்தினோம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி நிலக்கரி திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். 5ம் தேதி சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக பாஜக தலைவரும், நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.இந்த நிலையில் மத்திய அரசின் நிலக்கரி சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காவிரி டெல்டாவில் வடசேரி, வீராணம், சேத்தியாதோப்பு கிழக்கு மைக்கேல்பட்டி உள்ளிட்ட கிணறுகள் அமைப்பதற்கு விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்படுவதாகவும், திட்டத்தை கைவிட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு துணை நின்ற முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாயிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.