“காமராசர் பல்கலை., 10% இட ஒதுக்கீடு ரத்து பாமகவுக்கு கிடைத்த வெற்றி”

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட இதுக்கீடு என்ற அட்டவணை உருவாக்கப்பட்ட விவகாரம் கடும் எதிப்பு வந்ததை அடுத்து முடிவுக்கு வந்திருக்கிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 2022-23-ம் ஆண்டிற்கான…

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட இதுக்கீடு என்ற அட்டவணை உருவாக்கப்பட்ட விவகாரம் கடும் எதிப்பு வந்ததை அடுத்து முடிவுக்கு வந்திருக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 2022-23-ம் ஆண்டிற்கான முதுகலை (எம்.எஸ்சி,) உயிரி தொழில்நுட்பவியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

மொத்தம் 30 இடங்கள் மட்டுமே உள்ள இப்படிப்பிற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தின் 16-வது பிரிவில் சிறப்பு வகைப்பாட்டின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள், பொருந்தாது என மூன்று உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், விண்ணப்பத்தின் கீழ் பகுதியில், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10% இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் என்ற இட ஒதுக்கீடு தமிழக பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்த உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

https://twitter.com/drramadoss/status/1536620526805712896

காமராசர் பல்கலைக்கழகத்தின் சமூக அநீதியை பாட்டாளி மக்கள் கட்சி தான் அம்பலப்படுத்தியது. எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை ரத்து செய்யப்பட்டு 69% இட ஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி!

தமிழ்நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்திற்கான இட ஒதுக்கீட்டில் ரோஸ்டர் முறை செம்மையாக கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பபடுகிறது. இது குறித்தும் அரசு ஆய்வு செய்து சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.