“துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் உள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி!

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியுடன் இருக்கின்றன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக மகளிர் அணி கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அப்போது, “துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியுடன் இருக்கின்றனர். அதிமுக ஜனநாயகத்துடன் இயங்க கூடிய இயக்கம். இதுபோல் திமுக இயங்க முடியுமா? அதிமுக என்பது ஒரு குடும்பம் பல்வேறு சாதி, மதங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம்.

அதிமுக அரைநூற்றாண்டு கண்ட கட்சி, அதனை அழித்து விடலாம் முடியாது. மக்கள் அதிமுகவிற்கு தான் ஓட்டுப்பட்டு எம்எல்ஏ ஆக்கியுள்ளனர். ஆனால், சிலர் நமது இரட்டை இலை சின்னத்தில் இருந்து வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்து அவர்களுடன் இணைத்து வருகிறார்கள். இந்த ஆட்சியை நடத்த முதல்வருக்கு என்ன அருகதை உள்ளது?

நான் 34 வயதில் எம்எல்ஏ ஆனேன். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட சட்டமன்றத் தேர்தலில் நமது வாக்கு சதவீதம் அதிகம். மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.