தமிழ் நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் முதலைச்சர் விஜய் முன்னிலையில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
தவெக சார்பில் தமிழ் நாடு அமைச்சரவையில் பங்கேற்க கோரி காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் சார்பில் 2 எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.
அதே நேரம் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறிவிட்டனர்.
மறுபுறம் விசிக தலைவர் திருமாவளவன், “தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்போம்” என்றார்.
ஐயுஎம்எல் கட்சியின் மாநில நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தவெக அமைச்சரவையில் பங்கெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டு இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




