ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7 : 30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டியாகும்.
ருத்ராஜ் கெய்க்வார்ட் தலைமையிலான சென்னை அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 6ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 7 வது உள்ளது.
சுப்மன் கில் தலைமயிலான குஜராத் அணி 13 போட்டிகளில் விளையாடி அதில் 8 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.
உத்தேச அணி விவரம் :
சென்னை : சஞ்சு சாம்சன் (WK), ருதுராஜ் கெய்க்வாட் (C), உர்வில் படேல், கார்த்திக் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், அகேல் ஹொசைன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன்.
குஜராத் : சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (C), ஜோஸ் பட்லர் (WK), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ்.







