பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பதியில் இருந்து  தமிழக அரசின் எஸ்…

கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதியில் இருந்து  தமிழக அரசின் எஸ் சி டி சி சொகுசு பேருந்து  35 பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் சக்திவேல் என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தானது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த வெலகல்நத்தம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென இரு சக்கர வாகனம் ஒன்று பேருந்தின் வலது புறம் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் விபத்தை தவிர்கும் பொருட்டு ஓட்டுநர் பேருந்தை இடது புறம் திருப்ப முயன்ற போது பேருந்தானது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நான்கு குழந்தைகள் உட்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.மருத்துவமனையில் காயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.