முக்கியச் செய்திகள் தமிழகம்

பேருந்து விபத்து; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்

செங்கல்பட்டு அருகில் அரசு பேருந்து விபத்தில், உயிர்ச்சேதமின்றி சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநரை பயணிகள் பாராட்டினர்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து போளூர் வரை சென்ற அரசு பேருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பச்சையம்மன் கோயில் அருகே சென்ற போது பச்சையம்மன் கோயில் உட்பகுதியில் இருந்து வந்த டிராக்டர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது திடீரென சாலையின் குறுக்கே நின்றுள்ளது.

அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து (SRTC) டிராக்டர் மீது மோதாமல் இருக்க திடீரென சற்றும் எதிர்பாராமல் ஓவர்டேக் பண்ணி சென்றுள்ளது. விரைவு பேருந்து பின்னால் வந்த மற்றொரு பேருந்தான சென்னை போளூர் செல்லும் அரசு பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடிக்க முயன்றபோது பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் சாலையோரம் இருந்த கட்டைகளில் மோதி பேருந்து நிறுத்தியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் உயிர்ச்சேதமின்றி சாமர்த்தியமாக செயல்பட்ட வந்தவாசியை சேர்ந்த ஓட்டுனர் முருகனை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

பின்னர் பயணிகள் மாற்று பேருந்துகள் மூலம் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் பேருந்து முன்சக்கரம் கழன்று, டீசல் டேங்க் உடைந்து சேதமடைந்து டீசல் ஊற்றிக்கொண்டு இருப்பதால் மேற்கொண்டு தீவிபத்து ஏதும் நடக்காமல் இருக்க செங்கல்பட்டு தீயணைப்புத்துறை தண்ணீர் பீய்ச்சி அடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் அரசு போக்குவரத்து பணிமனை டெக்னீஷியன்கள் பேருந்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

4 வது டெஸ்ட்: சாதனை ஷர்துல், 3 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து

Saravana Kumar

ஓடிடியில் வெளியாகிறது சந்தானம் நடித்த படம்

Gayathri Venkatesan

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படும் சிறுவர்கள்!

Saravana Kumar