ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 13 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13  பேர் உயிரிழந்துள்ளனர்.  பேருந்து விபத்து  மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு இன்று காலை பேருந்து ஒன்று…

மத்திய பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13  பேர் உயிரிழந்துள்ளனர். 

பேருந்து விபத்து 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு இன்று காலை பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து கல்கோட் பகுதியில் நர்மதை ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவற்றில் மோதி 100 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளனாது.

பேருந்து ஆற்றுக்குள் விழுந்ததால் பயங்கர சத்தம் கேட்டது. இதை பார்த்த மக்கள் ஓடி வந்தனர். பேருந்து ஆற்றுக்குள் விழுந்ததில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பேருந்துக்குள் இருந்து வெளிவர முடியாமல் தவித்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் அருகில் இருந்த போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

13 பேர் பலி

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நீரில் மூழ்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. 15 பேர் உடனடியாக மீட்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆற்றில் விழுந்த பேருந்தை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர். ஆனால் அதில் பயணம் செய்த பயணிகள் பலரை காணவில்லை. அவர்கள் நிலை என்ன என்பதும் தெரியவில்லை. நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பிரதமர் மோடி இரங்கல்

இந்த சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியில் நடந்த பேருந்து விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.