அடுத்த தலைமுறை சிறிய டெஸ்லா காரை உருவாக்கி வருவதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் மார்க்கெட்டையே தனது எலெக்ட்ரிக் கார் தயாரிப்பால் புரட்டி போட்ட நிறுவனம் டெஸ்லா. இந்த நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மிகப் பெரிய அளவிலான டெஸ்லா ஆலையை நடத்தி வருகிறார். அங்குதான் அதிகமான டெஸ்லா கார்கள் தயாராகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அடுத்த தலைமுறை டெஸ்லா கார் குறித்து முக்கிய தகவலை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதாவது அளவில் சிறிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க முயற்சித்து வருவதாக கூறியுள்ளார். இதன் விலை நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். டெஸ்லா மாட 3 காரை தயாரிக்க ஆகும் செலவில் 50 சதவீத செலவே தற்போது தயாரிக்க இருக்கும் புதிய காருக்கு தேவைப்படும் என்று எலான் மஸ்க தெரிவித்தார். மேலும் இந்த கார் முழுவதும் தானாகவே இயங்கும் வகையில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் மேலும் இதை உருவாக்குவதற்கு இன்னும் கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி : மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை எல்லோரும் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஆனால் எல்லோராலும் வாங்கக்கூடிய அளவுக்கு விலை இல்லை என்று கருத்து நிலவி வந்த நிலையில் எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.