பொம்மையா சுவாமி மாலை தாண்டும் விழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம், ‌ஜே.புதுக்கோட்டையில் ஸ்ரீ பொம்மையா சுவாமி மாலை தாண்டும் விழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி ஜே புதுக்கோட்டையைச் சேர்ந்த மூலிகை சின்னமா நாயக்கர் திண்ணை…

திண்டுக்கல் மாவட்டம், ‌ஜே.புதுக்கோட்டையில் ஸ்ரீ பொம்மையா சுவாமி
மாலை தாண்டும் விழாவை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி ஜே புதுக்கோட்டையைச் சேர்ந்த மூலிகை
சின்னமா நாயக்கர் திண்ணை மந்தையில் உள்ள, ஸ்ரீ பொம்மையா சுவாமி மாலை
தாத்தா மாலக்கோவிலில் மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில்
விலவ கூடை அழைத்தல், பொதிக் கல்லை எடுத்தல், ஐம்பொன்னால் ஆன பொம்மையை
சுவாமியின் கம்பளக் கம்புடன், கம்பளத்து பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் தலையில்
தலப்பாக்கட்டி கம்பளக்கம்புடன் கோவிலை மூன்று முறை வலம் வந்தனர்.

அதனைத் தொடர்ந்து , 9 மந்தையை சேர்ந்தவர்கள் தங்களின் எருதுகளை
கோவில் முன்பு அழைத்து வந்து, பூஜை கட்டி எல்லைக்கு அழைத்துச் சென்றனர்.
எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை எருதுகளை அவிழ்த்துவிட்டனர்.
அதில் முதலில் வரும் எருதிற்கு மஞ்சள் மற்றும் எலுமிச்சம் பழம் கொடுத்து
தெய்வமாக நினைத்து வழிபாடு செய்தனர்.

எருது விடும் விழாவில் 9 மந்தைங்களைச் சேர்ந்த 150 க்கு மேற்பட்ட மாடுகள் கலந்து
கொண்டன. முதலாக ஓடி வந்த சிக்கம நாயக்கர் மந்தையை சேர்ந்த எருதிற்கு,
எலுமிச்சம் கனி கொடுத்து மரியாதை செய்தனர். இது குறித்து கம்பள பெரியவர்
கூறுகையில், 700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்கள் வழிபாடு தான்
இந்த திருவிழா என்றார்.

இதில் திண்டுக்கல், திருச்சி ,தேனி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த , ராஜ கம்பள சமுதாய வேதமங்கராஜ் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.