முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவையும், குடிமக்களையும் முதன்மையாக கொண்டு பட்ஜெட் அமையும்- பிரதமர் மோடி

இந்தியாவையும், குடிமக்களையும் முதன்மையாக கொண்டு இந்த பட்ஜெட் அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி குடியரசு தலைவர் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, பொருளாதார உலகில் இருந்து நம்பகமான குரல்கள், ஒரு நேர்மறையான செய்தியையும், நம்பிக்கையின் வெளிச்சம் மற்றும் உற்சாகத்தின் தொடக்கத்தையும் கொண்டு வந்துள்ளன. இந்த நாள் மிகவும் முக்கியமானது. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில் முதன்முறையாக குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்.

நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ஆற்றும் முதல் உரையானது, நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், குறிப்பாகப் பெண்களுக்கான மரியாதைக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். தற்போது உலகத்தின் பார்வைகள் அனைத்தும் இந்தியாவின் மீது உள்ளது.

நமது நிதி அமைச்சரும் ஒரு பெண் தான். அவர் நாளை மேலும் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இன்றைய சூழ்நிலையில், இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே இந்தியாவின் பட்ஜெட்டைப் எதிர்நோக்கியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும், இந்தியாவையும், குடிமக்களையும் முதன்மையாக கொண்டு இந்த பட்ஜெட் அமையும். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். நிலையற்ற உலக பொருளாதார சூழ்நிலையில், இந்தியாவின் பட்ஜெட் சாமானிய குடிமக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்ய முயற்சிக்கும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விக்ரம் படத்துக்கு பிரபல இயக்குநர் பாராட்டு!

Web Editor

மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு – ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

EZHILARASAN D

திருவண்ணாமலை மகா தீபம்: லட்சக் கணக்கில் குவிந்த பக்தர்கள்

Web Editor