2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். தனது உரையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை :
புதிய அறிவிப்புகள்
- கால்நடை மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகள், ஆய்வுக்கூடங்கள் அமைக்க கடன் சார்ந்த மூலதன மானியத் திட்டம் (Loan-linked Capital Subsidy Scheme) அறிமுகம் செய்யப்படும்.
- வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் DATA சென்டர்களை ஏற்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த வழிமுறைகளை மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- 20 லட்சத்திற்கும் குறைவான மொத்த மதிப்புள்ள அசையாத வெளிநாட்டு சொத்துக்களை வெளியிடாதவர்களுக்கு வழக்குத் தொடரப்படுவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
வரி குறைப்பு
- மருத்துவம், கல்விக்கான மூலத்தொகையில் இருந்து வசூலிக்கப்படும் வரி (TCS) 5% இருந்து 2% மாக குறைக்கப்படுகிறது.
- NRI’s அவர்களது சொத்துக்களை விற்கும் பொழுது அதற்கான வரி விகிதங்கள் குறைப்படுகிறது.
- வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வோருக்கு வரிபிடித்தமானது தற்போது உள்ள 5% முதல் 20% ஆக உள்ளது . இது 2% ஆக குறைக்கப்படுகிறது.
- விமான உதிரிபாகங்களுக்கான இறக்குமதியில் வரி குறைப்பு
- காலணிகள் ஏற்றுமதி செய்வதற்கு மூலப்பொருட்களை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சலுகைகள் வழங்கப்படுகிறது.
வரி விலக்கு
- மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் லித்தியம் பேட்டரி களுக்கான இறக்குமதி வரி இல்லை என அறிவிக்கப்படுகிறது.
- புற்று நோய்க்கு தேவையான 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
- 7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் போதும் அதற்கான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- மைக்ரோ அவன்ளுக்கும் சுங்க வரி இல்லை என்று அறிவிக்கப்படுகிறது.
- மத்திய பட்ஜெட் 2026: பாதுகாப்பு பிரிவுகளுக்கான விமான பாகங்களுக்கு சுங்க வரி தள்ளுபடி செய்யப்படும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். அவர் சுமார் ஒரு மணி நேரம் 26 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார்.







