பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கை தாக்கல்

மக்களவையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பட்ஜெட்டை மக்களவையில் 11 மணியளவில் தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக…

மக்களவையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய பட்ஜெட்டை மக்களவையில் 11 மணியளவில் தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும், 2வது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் இதுவாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 10வது மத்திய பட்ஜெட் தாக்கல் இது.

பட்ஜெட் தாக்கலில் அவர் பேசியது பின்வருமாறு:

  • இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2% ஆக இருக்கும்.
  • இந்த ஆண்டிற்கான பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்டாக இருக்கும்.
  • கொரோனா காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.
  • எந்தவித பொருளாதார சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்
  • கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரிசெய்து வருகிறோம்.
  • உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • ரயில்வே, கனரக தொழில் உள்ளிட்ட 15 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • போக்குவரத்து கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்காக ரூ.20,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிக்க கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.