2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை, இந்தியாவை சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இருந்து 100-வது ஆண்டை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்:
- நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும்.
- அடுத்த 3 ஆண்டுகளில் 4000 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
- சிறு தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ரயில்வே துறையில் புதிய திட்டங்கள்.
- விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு.
- விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்களின் அளவு அதிகரிக்கப்படும்.
- சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் மேம்படுத்தப்படும்.
- சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு.
- விவசாயிகளிடம் இருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








