பட்ஜெட் 2022-23: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பட்ஜெட் 2022 தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து நாடாளுமன்றம் வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இதற்காக, மத்திய…

பட்ஜெட் 2022 தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து நாடாளுமன்றம் வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இதற்காக, மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் வருகைத் தந்தனர்.

தொடர்ந்து, வழக்கம்போல் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சரவை முதலில் ஒப்புதல் அளிக்கப்படும்.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரும் நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.