வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்த சகோதரர்களில் தம்பி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய அண்ணனை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகை அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நாகை நரிமணம் சுல்லாங்கால் பகுதியில் அவர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பிரகாஷ் என்பவர் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஈரோட்டில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்துவரும் ராகுலின் சகோதரரான பிரகாஷ் ஈரோட்டிலிருந்து கஞ்சா விதையை வாங்கிவந்து வீட்டில் வளர்த்தது தெரியவந்தது. கஞ்சா வளர்த்த ராகுலை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய பிரகாஷை தேடிவருகின்றனர்.
வீட்டில் உள்ளவர்கள் அழகுக்காக வளர்க்கப்படும் செடி என கருதி வீட்டில் முன்பு வைத்தபோது பொதுமக்கள் போலீசிற்கு தகவல் கொடுத்ததால் சகோதரர்கள் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.







