சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.5235க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.5235க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும் : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு உடல்நலக்குறைவு!
இதேபோல் ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.28 உயர்ந்து 5 ஆயிரத்து 235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சுத்தமான தங்கமாக கருதப்படும் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 224 ரூபாய் அதிகரித்து 5,597 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் 8 கிராம் தங்கத்தின் 44 ஆயிரத்து 776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.5569க்கு விற்பளை செய்யப்பட்டது.
அதேபோல் வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.70,200-க்கு விற்பனையாகிறது.