மகளிர் உலகக் கோப்பை டி20 கிர்க்கெட் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி இந்தியா வெளியேறியது.
தென் ஆப்பிரிக்காவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இந்தியா இடம்பெற்றது. டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய மகளிர் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், முதல் முறை சாம்பியன் ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியாவும் விளையாடியது.
இந்த ஆட்டங்களில் ஜெயிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இன்பதால் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடியது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்களை குவித்தது. இதில் முதலில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அண்மை செய்திகள்: பல தசாப்தங்களில் இல்லாத அளவு ஊதிய உயர்வை அறிவித்த டொயோட்டா, ஹோண்டா!
மற்றொரு தொடக்க வீராங்கனை பெத் மூனி அரை சதம் விளாசினார். அதிரடி நாயகி ஆஷ்லி கார்டன் 31 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லான்னிங் 49 ரன்கள் விளாசினார். இதையடுத்து, 173 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷஃபாலி வர்மா 9 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

ராட்ரிக்ஸ் 43 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து, கவுர் 52 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டில் வெளியேறினார்.
இதனால், இந்த டி20 கிர்க்கெட் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி இந்தியா வெளியேறியது.







