டொயோட்டா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள், ஊழியர்களுக்கான மிகப்பெரிய ஊதிய உயர்வை அறிவித்துள்ளன.
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டொயோட்டா மற்றும் ஹோண்டா, அந்தந்த நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் போனஸ் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட, மிக உயர்ந்த ஊதிய உயர்வை டொயோட்டாவின் தொழிற்சங்கம் கோரியிருந்தது. அதன் அடிப்படையில், டொயோட்டா நிர்வாகம், தனது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அறிவித்து, தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான கோரிக்கைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.
அதேபோல், ஹோண்டா நிறுவனம், ஊழியர்களுக்கான மாத ஊதியத்தில், இந்திய மதிப்பில் 11,660 ரூபாயும், அடிப்படை ஊதியத்தில் 7,670 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும், வருடாந்திர போனஸாக 6 மாத ஊதியத்தை வழங்கவுள்ளாதகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : ”நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது” – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த ஊதிய உயர்வு முடிவு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான மனித வளங்களை, பெரு நிறுவனங்கள் சேர்த்து வைப்பதை வெளிக்காட்டுகின்றன. டொயோட்டா நிறுவனம் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிலும், ஹோண்டா நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிலும், தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கியிருப்பதாக, ப்ளூம்பர்க் அறிக்கை தெரிவிக்கின்றன.
பல்வேறு பெருநிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம், செய்து வரும் நிலையில், டொயோட்டா மற்றும் ஹோண்டாவின் இந்த முடிவு, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.