முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; நிபுணர்கள் தீவிர சோதனை

வேலம்மாள் பள்ளிக்கு இரண்டாவது முறையாக யுஎஸ்ஏ நாட்டு வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்ததால், வெடிகுண்டு செயல் இழக்கும் சிறப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மூன்று பள்ளிகள் அமைந்துள்ளது. நேற்று குறுஞ்செய்தி மூலம் பள்ளி நிர்வாகி துணை முதல்வர் திலக் என்பவருக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக 3 பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மருதம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் மோப்பநாய் உள்ளிட்டவைகளுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் போலீசார், வெடிகுண்டு புரளி என்று சோதனையில் தெரிவித்துவிட்டு சென்றனர். அதனால், நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் யுஎஸ்ஏ செல்போனின் அதே எண்ணில் இருந்து வந்த குறுஞ்செய்தியில் வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்ததால் இன்று இரண்டாவது நாளாக மூன்று பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் புகார் காரணமாக தற்போது வேலம்மாள் இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் மீண்டும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இருபதுக்கும் மேற்பட்ட கவரப்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் இன்று இரண்டாவது நாளாக பள்ளி நிர்வாகம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு எப்போதும் வேண்டுமானாலும் வெடிக்கும் என இரண்டாவது முறையாக குறுஞ்செய்தி வந்ததால் பள்ளி நிர்வாகத்தினர், காவல் துறையினர் எச்சரிக்கையுடன் பள்ளிக்கு விடுமுறை அளித்து தொடர்ந்து தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுதியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஊழியர்கள் உள்ளிட்டவர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளனர். சுமார் 25 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட பள்ளி வளாகத்தில் உண்மையாகவே வெடிகுண்டு உள்ளதா? அல்லது மீண்டும் போலி மிரட்டலா? என்பது குறித்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காங்கிரஸ் கட்சியை போல திமுகவும் அழியும்: அண்ணாமலை

Halley Karthik

அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியல் வெளியீடு

Halley Karthik

சிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்

G SaravanaKumar