முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு: முதல் சுற்றில் 11,595 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு முதல் சுற்று முடிவில் 11,595 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ஆ் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், 668 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றில் பங்கேற்க தரவரிசையில் 1 முதல் 14,524 வரையுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 12,294 மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் 11,595 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இடங்கள் ஒதுக்கப்பட்ட 11,595 பேரும் அடுத்த 7 நாட்களுக்குள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும். முதல் சுற்றில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 278 பேர் விருப்பம் தெரிவித்த நிலையில், 274 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய காவல் துறை ஆணையரகங்கள்: திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Arivazhagan Chinnasamy

திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார் யஷ்வந்த் சின்கா!

Niruban Chakkaaravarthi

நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்-வைகோ கண்டனம்

G SaravanaKumar