நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே குண்டுவெடிப்பு

நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தில் குண்டு வெடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ள பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.…

நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தில் குண்டு வெடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ள பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். முன்னாள் ஆபாச நடிகையான சன்னி லியோன் இந்தி பிக் பாஸில் கலந்து கொண்டு அதன் பின்னர் இந்தி படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் கடந்த ஆண்டு இறுதியில் தமிழில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் முதன்மையான கதாபாத்திரதத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சன்னிலியோன் மணிப்பூரில் உள்ள இம்பாலில் நாளை நடைபெறும் ஃபேஷன் ஷோவில் கலந்து கொள்ளவுள்ளார்.  அந்த நிகழ்ச்சிக்கான அரங்கு அமைக்கும் ஏற்பாடுகள் இன்று தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பேஷன் ஷோ நடைபெறும் பகுதயில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இன்று காலை 6.30 மணி அளவில் திடீரென குண்டு வெடிப்பு நடந்து உள்ளது. எனினும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு எந்தவித பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கையெறி குண்டு எறிந்தது தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.