அதானி குழும விவகாரம்: இந்தியா பற்றிய கருத்து மாறவில்லை – நிர்மலா சீதாராமன்

அதானி குழும விவகாரத்தால் இந்தியாவைப் பற்றிய கருத்து மாறவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதி முறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன்…

அதானி குழும விவகாரத்தால் இந்தியாவைப் பற்றிய கருத்து மாறவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதி முறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனையடுத்து அதானி நிறுவன பங்குகளும் அதானி நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்தது. இதன் எதிரொலியாக அதானி குழுமத்தின் முக்கிய பங்குகள் நேற்று சரிவடைந்தன. இந்த இழப்புகளிடையே அதானி நிறுவனம் எஃப்பிஓ முறையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 20,000 கோடி நிதி திரட்டும் முடிவை அதானி திரும்பப் பெற்றது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில்,  இந்திய சந்தைகள் சிறப்பான முறையில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதானி குழுமம் குறித்த சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்காது. இந்தியா முற்றிலும் நன்கு நிர்வகிக்கப்பட்ட நாடாகவும், சிறப்பான ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சந்தையாகவும் இருக்கிறது. உலக அளவில் எவ்வளவு பேசப்பட்டாலும் இந்திய நிதிச் சந்தைகள் எப்படி செயல்படுகின்றன என்பதை குறிக்கப் போவதில்லை என்றார்.

 

மேலும், அதானி குழும நெருக்கடிக்கு மத்தியில் கடந்த இரண்டு நாட்களில் அன்னிய செலாவணி கையிருப்பு 8 பில்லியன் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தார். FPOக்கள் வருகின்றன, வெளியேறுகின்றன. ஒவ்வொரு சந்தையிலும் இந்த ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களில் 8 பில்லியன்கள் வந்திருப்பது இந்தியா மற்றும் அதன் உள்ளார்ந்த பலம் பற்றிய கருத்து அப்படியே உள்ளது என்பதை நிரூபிக்கிறது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.