குழந்தை பிறக்க போகிறது – குட் நியூஸ் கொடுத்த தீபிகா – ரன்வீர் தம்பதி!

பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் தீபிகா படுகோனே கடந்த 2006…

பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் தீபிகா படுகோனே கடந்த 2006 ஆம் ஆண்டு கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார்.  இதையடுத்து, இந்தி திரையுலகில் 2007 ஆம் ஆண்டு ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  நடிகர் ரன்வீர் சிங் 2010 ஆம் ஆண்டு ‘பேண்ட் சர்மா பாராத்’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்கள் : ‘ஒன் டீ ப்ளீஸ்’-டோலி சாய்வாலா கடையில் தேநீர் அருந்திய “பில்கேட்ஸ்” – வீடியோ வைரல்!

2013ம் ஆண்டு வெளியான ‘ராம் லீலா’ திரைப்படத்தில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் இணைந்து நடித்தனர்.  அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதையடுத்து ,பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே இருவரும் 6  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில்,  இன்று தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  அதில், நடிகை தீபிகா கர்ப்பமாக இருப்பதாகவும்,  செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.   இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.