புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உடல், தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர், கடந்த மாதம் 16 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலிபான்களால் கொல்லப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆப்கானிஸ்தானில் போர் பகுதியில் புகைப்படக்கலைஞராக பணியாற்றி வந்தார். கந்த காரில் தலிபான்களுக்கும் அரசு படைக்கும் நடந்த மோதலை புகைப்படம் எடுக்க, சித்திக் காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அரசு படையினரைச் சேர்ந்தவர்களும் உடன்ருந்தனர்.
அவர்களின் கார் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால், அரசு படையினர் தப்பிச் சென்றனர். 3 வீரர்களுடன் நின்றிருந்த சித்திக் மீது தலிபான் தீவிரவாதி ஒருவர் எறி குண்டை வீசினார். படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த மசூதிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
அந்த மசூதிக்குள் நுழைந்த தலிபான்கள், சித்திக்கை கொடூரமான முறையில் கொன்று அவர், உடலை சிதைத்துள்ளனர். ஆரம்பத்தில் வெளியான புகைப்படங்களில் அவர் உடலில் காயங்கள் தெரிந்தன. ஆனால், செஞ்சிலுவை சங்கத்திடம் அவர் உடல் கொடுக்கப்பட்ட போது, அது சிதைந்திருந்ததாக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.