ராஜ் குந்த்ரா ஆப்-பில் இருந்து 51 ஆபாச படங்கள் பறிமுதல்

ராஜ் குந்த்ராவின் ஆப்-பில் இருந்து, 51 ஆபாச படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆபாசப் படங்கள் தயாரித்து ஹாட்ஷாட்ஸ் என்ற செல்போன் செயலியில் வெளியிட்டு, கோடிக்கண்க்கில் பணம் சம்பாதித்ததாக, நடிகை…

ராஜ் குந்த்ராவின் ஆப்-பில் இருந்து, 51 ஆபாச படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆபாசப் படங்கள் தயாரித்து ஹாட்ஷாட்ஸ் என்ற செல்போன் செயலியில் வெளியிட்டு, கோடிக்கண்க்கில் பணம் சம்பாதித்ததாக, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருடன் ரியான் தோர்பே என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த விசாரணையில் அரசு வழக்கறிஞர் அருணா பாய் கூறும்போது, ராஜ் குந்த்ராவிடம் இருந்து 51 ஆபாசப்பட வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட வீடியோவில், 35 வீடியோ ‘ஹாட்ஷாட்ஸ்’ லோகோவுடனும், 16 வீடியோ பாலிபேம் லோகோவுடனும் இருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் வாட்ஸ் அப் ஆதாரங்களை ராஜ் குந்த்ராவும் ரியான் தோர்பேவும் அழித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு 41 ஏ பிரிவின் படி நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதை தோர்பே பெற்றுக்கொண்டதாகவும் ராஜ் குந்த்ரா பெற்றுக்கொள்ள மறுத்து விட்டதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அவர்கள் கைது செய்யப்பட்டது சரியானதுதான் என்றும் இல்லை என்றால், அவர்கள் மற்ற ஆதாரங்களை அழிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.