எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!

சென்னையை அடுத்த எண்ணூர் கடல் பகுதியில், ஒரே நேரத்தில் நான்கு பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது.

சென்னையை அடுத்த  எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. இது தொடர்பாக அங்குள்ள மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண்களில் 3 பேர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த தேவகி செல்வம் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷாலினி, பவானி, காயத்ரி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடற்கரை அருகே 4 பெண்களின் சடலங்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.