குஜராத் மாநில முதல்வராக பாஜகவின் பூபேந்திர படேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 12-ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், பாஜக 156 இடங்களில் வெற்றிபெற்று 7வது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கூட்டத்தில் சட்டமன்ற பாஜக தலைவராக, பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார். காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் நடக்கும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் சட்டமன்ற பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய பூபேந்திர படேல், குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது தொடர்பாக, குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.