பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி!

மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி…

மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக பாஜக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று (மார்ச் 21) அறிவித்தது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன்,  மத்திய சென்னையில் வினோத் பி செல்வம்,  கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் போட்டியிடுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்விவரம் பின்வருமாறு.

  1. திருவள்ளூர் – பாலகணபதி
  2. வடசென்னை – பால் கனகராஜ் 
  3. திருவண்ணாமலை – அஸ்வத்தாமன்
  4. நாமக்கல் – கே.பி.ராமலிங்கம்
  5. திருப்பூர் – முருகானந்தம்
  6. பொள்ளாச்சி – வசந்தராஜன்
  7. கரூர் – செந்தில்நாதன்
  8. சிதம்பரம் – கார்த்தியாயினி
  9. நாகை – எஸ்.ஜி.எம்.ரமேஷ்
  10. தஞ்சை – எம்.முருகானந்தம்
  11. சிவகங்கை – தேவநாதன் யாதவ்
  12. மதுரை – ராம சீனிவாசன்
  13. விருதுநகர் – ராதிகா சரத்குமார்
  14. தென்காசி – ஜான் பாண்டியன்
  15. புதுச்சேரி – நமச்சிவாயம்

விளவங்கோடு இடைத்தேர்தல்:

மேலும்,  தமிழ்நாட்டில் விளவங்கோடு மற்றும் திரிபுரா மாநிலத்தில் ராம்நகர் தொகுதியிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விளவங்கோடு தொகுதியில் வி.எஸ்.நந்தினி மற்றும் ராம்நகர் தொகுதியில் தீபக் மஜும்தார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதே நாளில் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.