பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறுகிறார் – மனோ தங்கராஜ்

எல்காட் செயல்பாடுகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நடைபெற்ற “நுண்ணரங்கு 21” எனும் செயற்கை…

எல்காட் செயல்பாடுகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நடைபெற்ற “நுண்ணரங்கு 21” எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு மாநாட்டை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இ-சேவை மையங்களில் ஆதார் மூலம் சேவை கட்டணம் செலுத்தும் முறையையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய மனோ தங்கராஜ், மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களில் 130-க்கும் அதிகமான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டை நவீனமயமாக்கும் முனைப்பில் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் அனைத்து சேவைகளும் விரைவில் நவீன மயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த 6 மாத காலங்களில் எல்காட் நிறுவனத்தில் வியூகம் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.