நியூஸ் 7 தமிழ் எதிரொலி; சென்னை டுமீங்குப்பம் பகுதியில் மாற்று குடியிருப்புக்கள்

நியூஸ் 7 தமிழ் எதிரொலியாக சென்னை டுமீங்குப்பம் பகுதியில், வீடுகளை இழந்த மக்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மாற்று குடியிருப்புக்கள் வழங்கப்பட்டன. சென்னை டுமீங்குப்பம் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட…

நியூஸ் 7 தமிழ் எதிரொலியாக சென்னை டுமீங்குப்பம் பகுதியில், வீடுகளை இழந்த மக்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மாற்று குடியிருப்புக்கள் வழங்கப்பட்டன.

சென்னை டுமீங்குப்பம் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்களின் மேற்கூரைகள் கடந்த மாதம் இடிந்து சேதமடைந்தது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பானது. தொடர்ந்து மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், ஒரு வாரத்தில், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்குடியிருப்புக்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வீடுகளை இழந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு மாற்றுகுடியிருப்புக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரன், சட்டமன்ற உறுப்பினர் தா. வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.