அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டம் வகுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடத்தை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமைச்சர் பொறுப்பேற்ற பின் முதன்முறையாகக் கோவைக்கு வந்திருக்கிறேன். இந்த ஆய்விற்கு என்னுடன் தகவல் தொழில் நுட்ப முதன்மை செயலாளர் வந்துள்ளார். ரூ.114 கோடி மதிப்பீட்டில் கோவை இரண்டாவது எல்காட் அமைக்க கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதை ஆய்வு செய்து விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் நுட்பப் பூங்காவை அமைத்து சிறப்பாக செயல்படுத்த உள்ளோம்.
தென் மாவட்டங்களில் மிக குறைவாக தொழில் வாய்ப்பு உள்ளதால் அங்கு கூடுதலாக கவனம் செலுத்த இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டது. இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.