தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் Z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய, மாநில உளவுப்பிரிவு அண்மையில் தகவல் அளித்தது. ஏற்கனவே அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பில், 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் ஆகியோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பை நீக்கி, Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், நவீன ஆயுதங்களுடன் மத்திய துணை ராணுவப் படையைச் ( Z பிரிவு) சேர்ந்த 6 வீரர்கள் இன்று முதல் அவருக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.
பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ள வீரர்களுக்கு நவீன ரக துப்பாக்கி, தகவல் தொடர்பு கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், எந்தவித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையிலும், எதிரிகளையும் சமாளிக்கும் பயிற்சியையும் பெற்றவர்களாக வீரர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.