வானதி சீனிவாசன் பற்றி அவதூறு: நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக மகளிரணியினர் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்…

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக மகளிரணியினர் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் மீது சமூக வளைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், கடந்த சில மாதங்களாக முகநூல் மற்றும் யூ ட்யூப் பக்கங்களில் வானதி சீனிவாசனை தொடர்புப்படுத்தி அருவருக்கத்தக்க வார்த்தைகளை சிலர் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வளைதளங்களில் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் மற்றவர்களின் மனம் புண்படும் படி பேசும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.