டெல்லியில் தொடங்கியது பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் – தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக 2 நாள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த ஆண்டு கர்நாடகா உள்பட 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. வரும்…

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக 2 நாள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.

இந்த ஆண்டு கர்நாடகா உள்பட 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிப் பெறுவதற்கான வியூகம் குறித்து விவாதிக்க பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். 2 நாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளுடனான கூட்டணி, நலத்திட்டங்கள், மக்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, சாலை வழியே பாஜக தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதையடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் அவரது கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.