ஜெர்மனியில் ஆரம்ப பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு

ஜெர்மனியின் வடமேற்கு நகரமான பிராம்ஷேவில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு அருகில் 81 வயது முதியவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஒருவர் பலத்த காயமடைந்தார். அமெரிக்காவை போல ஜெர்மனியில் வன்முறைகள் பரவலாக இல்லை. ஆனால் சமீப…

ஜெர்மனியின் வடமேற்கு நகரமான பிராம்ஷேவில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு அருகில் 81 வயது முதியவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

அமெரிக்காவை போல ஜெர்மனியில் வன்முறைகள் பரவலாக இல்லை. ஆனால் சமீப காலங்களில் துப்பாக்கிச் சம்பவங்கள் ஜெர்மனியில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வடமேற்கு நகரமான பிராம்ஷோவில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு அருகில் 81 வயது முதியவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம் அடைந்தார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னையும் ஆயுதத்தால் காயப்படுத்தி கொண்டார் என ஓஸ்னாப்ரூக் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இளைஞரும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மற்றவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆரம்ப பள்ளிக்கும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும் தொடர்பில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி :பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிப்பு- நடுவழியில் பாடம் கற்கும் பள்ளி மாணவர்கள்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒருவர் உயிரிழந்ததும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னை தானே சுட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.