”இந்தியாவில் இதுவே முதல்முறை…” – மணீஷ் சிசோடியா குறித்து கவுதம் கம்பீர் விமர்சனம்

கல்வித்துறை அமைச்சர் ஒருவர் மதுபான கொள்கை மோசடி வழக்கில் சிக்கி திகார் சிறை செல்வது இதுதான் முதல் முறை என்று மணீஷ் சிசோடியா குறித்து பாஜக எம்பி கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில்,…

கல்வித்துறை அமைச்சர் ஒருவர் மதுபான கொள்கை மோசடி வழக்கில் சிக்கி திகார் சிறை செல்வது இதுதான் முதல் முறை என்று மணீஷ் சிசோடியா குறித்து பாஜக எம்பி கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.

டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, மணீஷ் சிசோடியா இன்று டெல்லி சிபிஐ போஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரியது. இந்நிலையில், அதை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் மார்ச் 4ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அண்மைச் செய்தி: மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் சந்திப்பு

இந்நிலையில் மணீஷ் சிசோடியா குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து  கம்பீர் கூறுகையில், இந்த வழக்கு நிரூபிக்கப்பட்ட  ஒன்று. இதற்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்தியாவில் முதன்முறையாக ஓர் கல்வி அமைச்சர் மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது உணர்ச்சிமிகுந்த வார்த்தைகளுக்கு இடமில்லை. சிசோடியா உச்சநீதிமன்றத்துக்கு செல்லட்டும். ஆனால் என்னை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மியும் வெளிப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.