முக்கியச் செய்திகள் தமிழகம்

பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க பாஜக அரசு தயாரக இல்லை; கனிமொழி எம்பி விமர்சனம்

எந்த பிரச்சினை குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறும் மத்திய பாஜக அரசு, பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை என திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவினர் ஒவ்வொரு விஷயத்திற்கும் பல நிலைப்பாடு எடுக்கக் கூடியவர்கள் என்பதால், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பெகாசஸ் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்பதால், அதற்கு உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும், ஆனால், அதற்கு அவர்கள் தயாராக இல்லை என்றும் கூறினார். மேலும், பெகாசஸ் விவகாரத்தில் அரசு நினைத்தால், யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி, தண்டனை கொடுக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்னை. இதனை விவாதிக்க கோரி அனைத்து கட்சி தலைவர்களும் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டு கொடுத்துள்ளதாகவும், ஆனால், அதனை எடுத்து அவர்கள் விவாதிக்க தயாராக இல்லை என்றும் கனிமொழி குற்றம்சாட்டினார்.

Advertisement:
SHARE

Related posts

குஷ்பு ட்விட்டர் பக்கம் முடக்கம்; விவரம் கேட்டு போலீசார் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம்

Halley Karthik

தமிழ்நாடு பட்ஜெட்: துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Ezhilarasan

கேரளாவில் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலை