முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக ஆட்சியில் மின்தடை; மாயத் தோற்றம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள் – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகாரையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மின் வயர்கள் மீது படர்ந்து இருக்கும் செடி, கொடிகள் மேல் அணில்கள் ஓடுவதால் இரண்டு வயர்கள் உரசி மின் துண்டிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த அதிமுக ஆட்சியில் குறைந்த மின் அழுத்த பிரச்சினை தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பாதிப்படைந்து, குறைந்த மின் அழுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சினைகள் 4 மாதங்களுக்குள் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து மின்சார வாரியத்தின் சார்பில் 2006- 2010 திமுக ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விட அதிமுக ஆட்சியில் உற்பத்தியான மின்சாரம் குறைவு என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆட்சியை விட தற்போது மின் தடை காலம் 1000 நிமிடங்கள் குறைந்துள்ளது என்றும், இனி வரும் காலங்களில் சீராக மின் விநியோகம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்குகள்: அடுத்த வாரம் விசாரணை.

EZHILARASAN D

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

Jayasheeba

இயக்குனர் பாரதிராஜா சாதாரண வார்டுக்கு மாற்றம்

EZHILARASAN D