குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் சூழ்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரைச் சந்தித்து பேசினார் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
வரும் ஜூலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை ஒரு மாதம் முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வியூகத்தை, அமைக்க இப்போதே பா.ஜ.க, தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டில் லுலு நிறுவனத்தை வர விடமாட்டோம் – அண்ணாமலை’
இது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரைச் திடீரென சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த ஆலோசனையில், பல்வேறு வகையான பிரச்சனைகள் ம்ற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மிக முகியமாக குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதித்ததாக சொல்லப்படுகிறது. வியாழக்கிழமை நடந்த இந்த திடீர் சந்திப்பு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தொடக்க முன்னெடுப்பு என்று கூறப்படுகிறது.
மேலும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் இந்த சந்திப்பை தொடர்ந்து, பிஜேபியின் மத்திய தலைமையின் ஆலோசனைக்குப் பிறகு, ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அவர்ன் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: