முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

முகநூலில் தேடல் விவரங்களை அழிப்பது எப்படி?

முகநூலில் உள்ள தேடல் விவரங்களை அழிப்பது எப்படி என்பது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம். 

சமூக வலைதளங்களில் முகநூல் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கோடிக்கணக்கான பயனாளிகள் உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.

முகநூலில் ஒருவர் தேடும் விவரங்களின் வரலாறுகளை நாம் தெரிந்துகொள்ள முடியும். இதை பொறுத்தவரை நாம் தேடும் விவரங்களின் வரலாறுகளை சீரான இடைவெளியில் அல்லது நாம் விரும்பும் போதெல்லாம் அவற்றை நீக்க முடியும்.

முகநூலில் உள்ள தேடல் விவரங்களின் வரலாற்றை எவ்வாறு எளிமையான முறையில் நீக்க முடியும் என்பதை இங்கு பார்ப்போம்.

ஆன்டிராய்டு செயலில் முகநூல் தேடல் விவரங்களை அழிக்கும் முறை:

1. முதலில் முகநூல் செயலிலை கைப்பேசியில் திறக்க வேண்டும்.
2. திரையின் மேல்பக்கத்தில் உள்ள தேடல் பட்டனை தட்டவும்.
3. தேடல் பட்டனை திறந்த பிறகு சமீபத்திய தேடல்களுக்கு பக்கத்தில் இருக்கும் தொகுத்தல் விருப்பத்தை தட்டவும்.
4. இப்போது, நடவடிக்கை பதிவு திறந்த உடன் நமக்கு தேவையான கட்டளைகளை தேடல் விவரங்களிலிருந்து அழிக்கலாம்.

முகநூல் தேடல் விவரங்களை இணையத்தில் அழிக்கும் முறை

1. http://www.facebook.com என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும்.
2. திரையின் மேல்பகுதியில் உள்ள மேல் வலது பகுதியில் உள்ள அம்புகுறியில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை தேர்ந்தெடுத்து செயல்பாட்டு பதிவை அழுத்த வேண்டும்.
3. செயல்பாட்டு பதிவில் உள்ள செயலை தேர்வு செய்ய வேண்டும்.
4. இப்போது தேடல் வரலாற்றை தேர்வு செய்து அதை அழிக்கலாம்.

Advertisement:
SHARE

Related posts

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிப்பது ஏற்புடையதல்ல

Saravana Kumar

ஓய்வு பெற்றவருக்கு முழு சம்பளமா ? கொந்தளிக்கும் பேராசிரியர்கள்

Halley Karthik

தமிழ்நாடு, புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை

Ezhilarasan