முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் லுலு நிறுவனத்தை வர விடமாட்டோம்- அண்ணாமலை

தமிழ்நாட்டில் லுலு நிறுவனத்தை வர விடமாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.   

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் நேரடியாக திமுகவுக்கு வாக்களித்தனர்.

பாஜக ஆரம்பத்திலேயே இது நடைமுறை சாத்தியம் இல்லாதது என கூறினோம். நாங்கள் சொன்னதை தான் தற்போது நிதியமைச்சர் சொல்லியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன மற்றொரு வாக்குறுதியை இன்று பொய் என சட்டப்பேரவையில் திமுகவினர்  ஒப்புக் கொண்டுள்ளனர்.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்த கொலைகள் மற்றும் 2 மாதத்தில் நடந்த 66 கொலைகளில் பிஎப்ஐ (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா) சம்பந்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உளவுத்துறை அறிவில் பேசி உள்ளார். உள்நாட்டு பாதுகாப்பில் இருந்த ஒருவர் அவ்வாறு பேசி உள்ளார். இதனை அரசியல் ஆக்கக் கூடாது. உண்மை என்னவோ அதை ஆளுநர் சொல்லியுள்ளார் என குறிப்பிட்டார்.

மேலும், வால்மார்ட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் லூலு நிறுவன விஷயத்தில் அமைதியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் லுலு மால் தொடர்பாக ஒரு செங்கலை கூட வைக்க பாஜக அனுமதிக்காது. சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் லுலு நிறுவனத்தை வரவிடமாட்டோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கோல் இந்தியாவில் 2.2 டன் நிலக்கரி உள்ளது. நிலக்கரி தமிழகத்திற்கு கூடுதல் தேவை உள்ளது. அதை சமாளிக்க முடியவில்லை என கூறுகின்றனர். கோல் இந்தியா நிலக்கரி மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கோல் இந்தியா நிறுவனம் குறை இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் பராமரிப்பில் தவறு செய்துள்ளனர். எனவே கோல் இந்தியாவில் பற்றாக்குறை எனச்சொல்வது மற்றொரு பொய் என கூறிய அவர், தற்போது அனைத்து வீடுகளிலும் யூபிஎஸ் தேவை. இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டுக்கு ஜெனரெட்டேர் தேவைப்படுகிறது. வரும் காலத்தில் ஒருவ்வொரு வீட்டிலும் நாமே மின்சாரத்தை தயார் செய்யும் நிலை உள்ளது என அவர் பேசினார்.

Advertisement:
SHARE

Related posts

10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் நியாயமானது: தமிழ்நாடு அரசு

Ezhilarasan

“சார்பட்டா பரம்பரை” – விமர்சனம்

Vandhana

அதிமுகவை பிரித்தாள நினைக்கும் சசிகலாவின் முயற்சி எடுபடாது: ஜெயக்குமார்

Gayathri Venkatesan