முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் நடிகைகள் குஷ்பு கௌதமி ட்விட்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ராஜபாளையம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் நடிகை குஷ்புவும் கௌதமியும் வேட்பாளராக நிறுத்தப்பட முடியாத நிலையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் என தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நட்சத்திர வேட்பாளராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகை குஷ்புவும் ராஜபாளையம் தொகுதியில் நடிகை கௌதமியும் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என அவரது தொண்டர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.


ஆனால் அதிமுக பாஜகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியும், ராஜபாளையம் தொகுதியும் இடம்பெறவில்லை. இதனையடுத்து நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு நான் என்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். மக்களுக்கான என்னுடைய பணிகளைத் தொடர்ந்து செய்வேன். நான் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் பாஜக பொறுப்பாளர் மட்டுமே, வேட்பாளர் என ஒருபோதும் சொன்னதில்லை” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நடிகை கௌதமி ட்விட்டர் பதிவில் “உங்கள் அன்பின் வாயிலாகக் கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன். இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னைப் பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்” என்றும் அன்புடன் உங்கள் கௌதமி” என பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Saravana Kumar

பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!

Karthick

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!

Jeba