உதயநிதிக்கு நடிகை கெளதமி கண்டனம்!

உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாக பேசுவது நாகரிகமற்ற செயல் என நடிகை கெளதமி கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளர் நடிகை கௌதமி பேட்டியளித்தார்,அப்போது பேசிய அவர்,விவாதம் என்பது ஆரோக்கியமாக…

உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாக பேசுவது நாகரிகமற்ற செயல் என நடிகை கெளதமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளர் நடிகை கௌதமி பேட்டியளித்தார்,அப்போது பேசிய அவர்,விவாதம் என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சில சந்திப்புகள் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக இருக்கலாம் ஆனால் அவ்வழியில் நடக்கக்கூடாது என பேசினார். மேலும் மக்களின் நலனுக்காக ஜனநாயகத்தை பின்பற்றி ஆரோக்கியமான விவாதமாக இருக்க வேண்டும்.

இது தலைவர் இன்று ஒரு பதவியில் இருந்தாலும் சரி, பதவிக்கு வர வேண்டும் என்று அநாகரிகமான முறையில் பேசக்கூடாது என கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாக பேசுவது நாகரிகமற்ற செயல். அவருடைய குணத்தின் அடிப்படையில்தான் உள்ளத்தில் உள்ளது. ஒருவருடைய நடத்தையும் எண்ணமும் எவ்வாறு இருக்கிறது என்பது இதன் மூலம் வெளியே வந்து உள்ளது. அரசியலில் பதவிக்கு வர வேண்டும் என உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசியதிற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply